கோவிட் பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் விதித்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் ஒமைக்ரான் தொற்று காரணமாக மூன்றாம் அலை பரவல் தீவிரமடைந்த நிலையில், தற்போது நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு ஐந்தாயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கோவிட் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் வழக்கம் போல் தொடங்க விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தொடர்பாக விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 27ஆம் தேதியிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை வழக்கம் போல் செயல்பட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.