தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பௌத்த முறையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு திருமணம்! - காதல் ஜோடி

புதுச்சேரி: அம்பேத்கர் மணிமண்டபத்தில் சடங்கு சம்பிரதாயங்களின்றி பௌத்த முறையில் காதலர்கள் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

marriage
marriage

By

Published : Nov 11, 2020, 12:48 PM IST

புதுச்சேரி பிச்சை வீரன் பேட்டையைச் சேர்ந்தவர் லிங்க சுப்பிரமணியம். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு, கல்லூரியில் படித்த போது ஹேமலதா என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்காக பெண்ணின் வீட்டை அணுகிய போது அவர்கள் திருமணம் செய்ய மறுத்து விட்டனர். காரணம் லிங்க சுப்பிரமணியன் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பார்ப்பன சமூகத்தை சேர்ந்த ஹேமலதா வீட்டார் திருமணத்திற்கு இசைவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், லிங்க சுப்பிரமணியமும், ஹேமலதாவும் இன்று கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்த முறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். மூட நம்பிக்கை மற்றும் சடங்கு சம்பிரதாயம் இன்றி இருவரும் மாலை மாற்றிக்கொண்டு தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதில், மாப்பிள்ளை வீட்டார் மட்டும் பங்கேற்றனர். சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளம் ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்துவைக்க துன்புறுத்திய மகன்... தீர்த்துக்கட்டிய தாய்!

ABOUT THE AUTHOR

...view details