தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்துக் கடவுள்களை அவமதித்ததாக புகார் - காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது மர்மநபர்கள் தாக்குதல்! - காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரான ஷைலஜா

இந்துக் கடவுள்களை அவமதித்ததாக கூறி, காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

insult-to-hindu-gods-cong-leaders-house-attacked-in-karnataka
insult-to-hindu-gods-cong-leaders-house-attacked-in-karnataka

By

Published : Jun 19, 2022, 7:25 PM IST

Updated : Jun 19, 2022, 7:32 PM IST

பெங்களூரு: கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரான ஷைலஜா, கடந்த 16ஆம் தேதி சமூக வலைதளமான கிளப் ஹவுசில் நடந்த நிகழ்ச்சியில், ராமன் மற்றும் சீதை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்து அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாக காங்கிரஸ் பிரமுகர் ஷைலஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் ஷைலஜாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கியதோடு, வீட்டின் மீது கருப்பு மையை ஊற்றியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டில் சொல்லி விடுவேன்.. ஓவர் ஓவர்.. காதலர்களை மிரட்டிய போலி போலீஸ்...

Last Updated : Jun 19, 2022, 7:32 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details