தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 கடைசி தேதி: ஐபிபிஎஸ் அறிவிப்பு! - chennai district news

புதுடெல்லி: வங்கி பணிகள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 ஆம் தேதி கடைசி நாள் என, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்) அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 'www.ibps.in' என்ற இணையதளத்தில் உள்ளன.

ஐபிபிஎஸ் பணிகளுக்கு வேலைவாய்ப்பு
ஐபிபிஎஸ் பணிகளுக்கு வேலைவாய்ப்பு

By

Published : Jun 8, 2021, 3:31 PM IST

Updated : Jun 8, 2021, 3:42 PM IST

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமானது (Institute of Banking Personnel Selection) 2021 ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கான குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் வாயிலாகப் பூர்த்தி செய்து, சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 28 ஆம் தேதி என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது உத்தேச தேதியாகும். காலிப்பணியிடங்களுக்கு எம்பிஏ, சிஏ ஆகிய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பதவிகளுக்கும் 18 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 என, விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோலைத் தொடர்ந்து 100 ரூபாயை நெருங்கிய டீசல்!

Last Updated : Jun 8, 2021, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details