தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்ஸ்டாகிராமில் 16 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு ஓர் புதிய அப்டேட் - Sensitive content control working in instagram

16 வயதிற்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும், புதிதாக இன்ஸ்டாகிராம் பயனராக நுழையும் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

16 வயதிற்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஓர் அப்டேட்..
16 வயதிற்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஓர் அப்டேட்..

By

Published : Aug 27, 2022, 12:52 PM IST

சான் பிரான்சிஸ்கோ: டிஜிட்டல் உலகில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் முக்கிய அங்கம் வகிப்பது இன்ஸ்டாகிராம் செயலி. இதில் பயனர்களின் வயதுக்கு ஏற்ப பல்வேறு கட்டுப்பாடுகளும் உள்ளன. அதோடு அடிக்கடி புதிய அப்டேட்களும் வருகிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் மற்றும் பார்க்கப்படும் வகையிலான வரையறுக்கப்பட்ட பதிவுகளை (வன்முறை, ஆபாசம், முகச்சுழிப்பை ஏற்படுத்துபவை, உணர்ச்சிமிக்க) கட்டுப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கினை தொடங்கும்போது தானாகவே ‘லெஸ்’ (less) என்ற முறையில்தான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியும். அதேநேரம் ஏற்கனவே 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்தால், அவர்களுக்கு ‘Standard' என்ற பிரிவின்படி வரையறுக்கப்பட்ட பகுதிகள் செயல்பட்டு கொண்டிருக்கும்.

இருப்பினும் அவர்கள் சுயமாக ‘less' செய்து கொள்ளலாம். இதன் மூலம் வரையறுக்கப்பட்ட பதிவுகளை தவிர்க்க முடியும். எப்படி LESS செய்வது.

  1. உங்களுடைய இன்ஸ்டாகிராம் புரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.
  2. அதில் ‘Settings' ஐ தேர்வு செய்யவும்.
  3. அதனுள் இருக்கும் ‘Account' ஐ தேர்வு செய்யவும்.
  4. தொடர்ந்து ‘Sensitive content control' ஐ தேர்வு செய்யவும்.
  5. அதில் உங்களுக்கு ‘Standard' என்ற பிரிவு தேர்வு செய்யப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக அதன் கீழுள்ள ‘less' பிரிவை கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க:குழந்தையின் நிர்வாணப் புகைப்படத்தைப் பதிவிட்டதாக பெற்றோர் மீது கூகுள் புகார்

ABOUT THE AUTHOR

...view details