தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடியின் உறுதி ஊக்கம் அளிக்கிறது - பாரத் பயோடெக் புகழாரம்

ஹைதராபாத்: பிரதமர் மோடிக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஊக்கம் அளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோடி
மோடி

By

Published : Mar 1, 2021, 3:19 PM IST

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தற்சார்பு இந்தியா கொள்கையைக் கட்டமைப்பதில் அவரின் உறுதி முக்கியத்துவம் பெறுவதாகவும் அது ஊக்கம் அளிக்கும்விதமாக உள்ளதாகவும் தடுப்பூசியைத் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவை ஒன்றிணைந்து எதிர்த்து வெற்றிகாண்போம்" எனப் பதிவிட்டுள்ளது.

இன்று காலை 6.30 மணி அளவில் அவருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. விதிமுறைகளின்படி, தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார். மார்ச் 1ஆம் தேதிமுதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details