ஆலப்புழா:கேரளபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் யஹியா தங்கல் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீதிபதிகளின் 'உள்ளாடைகள் காவி நிறம் என்று தெரிவித்தார்.
கேரளாவின் ஆலப்புழாவில் கடந்த 21ஆம் தேதி நடந்த பேரணியில் தங்கல் பேசுகையில், "நீதிமன்றங்கள் அச்சத்தில் உள்ளது. எங்கள் ஆலப்புழா பேரணியின் கோஷங்களைக் கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ந்து போகின்றனர். காரணம் என்ன தெரியுமா? காரணம் அவர்களின் உள்ளாடைகளின் நிறம் காவி. அவை காவி நிறத்தில் இருப்பதால் அவை மிக வேகமாக வெப்பமடையும். அந்த வெப்பத்தின் விளைவால் தீக்காயம் ஏற்படும். அது அவர்களை தொந்தரவு செய்யும்" என கூறினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலப்புழாவில் பிஎஃப்ஐ (கேரள பாப்புலர் ஃப்ரண்ட் ) பேரணியில் இளைஞர் ஒருவர், "இந்துக்கள் அரிசையையும், கிறிஸ்துவர்கள் ஊதுப்பத்தியையும் தங்களின் இறுதிச் சடங்கிற்காக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.