பெங்களூரு (கர்நாடகா): இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரூ.42 லட்சம் மதிப்பிலான ரதத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அவர் வழங்கினார்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக இந்த வாகனத்தை திருப்பதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதா மூர்த்தி, பன்முகத் தன்மை கொண்டவர். எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.