ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் கமல்கோட் செக்டாரில் உள்ள மடியான் நானக் போஸ்ட் அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கும், பாரமுல்லா போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் சம்பவயிடத்திற்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - kashmir terror attack
ஜம்மு காஷ்மீரின் நானக் போஸ்ட் அருகே மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

infiltration-bid-foiled-in-jk-uri-three-terrorists-killed
அப்போது பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களுடன், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த வாரம் காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பண்டிட் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்முவில் 1 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம்