ஸ்ரீநகர்(ஜம்மு-காஷ்மீர்):குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட்டிலுள்ள கெரான் செக்டார் பகுதியில் நேற்று (அக்.31) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி..சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் - Pak terrorist killed
ஜும்மு-காஷ்மீரில் கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Etv Bharat
இது தொடர்பாக போலீசார் தரப்பு கூறுகையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் கிராண்ட் செக்டர் வழியாக நேற்று (அக்.31) ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர்.
எச்சரிக்கையையும் மீறி எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்றபோது இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.