ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில், இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை மேற்கொண்டனர். அங்கு பாதுகப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுக்க தாக்குதல் நடத்தினர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். ராணுவ வீரர்கள் தாக்குதலை அடுத்து பயங்கரவாதிகள் பின்வாங்கினர்.
தப்பியோடிய அவர்களை தேடும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. காயமடைந்த மூன்று வீரர்களும் 12 ஜாட் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 18ஆம் தேதி உரி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சுகாதாரத் துறையை மேம்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை - வெங்கையா நாயுடு