மும்பை: நாட்டின் மூத்த தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவனருமான ரத்தன் டாடாவிற்கு மகாராஷ்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்ரா அரசின் முதல் "உத்யோக் ரத்னா" விருதினை இன்று (ஆகஸ்ட் 19ஆம் தேதி) வழங்கி கவிரவித்து உள்ளனர்.
85 வயதான டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவிற்கு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் தெற்கு மும்பையின் கொலாபாவில் உள்ள தொழிலதிபரின் இல்லத்தில் மகாராஷ்டிரா அரசின் முதல் "உத்யோக் ரத்னா" விருதினை வழங்கினார்கள். மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (MITC) சார்பாக ரத்தன் டாடாவிற்கு சால்வை மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ரத்தன் டாடாவிற்கு "உத்யோக் ரத்னா" விருது வழங்கி கவுரவித்தது அந்த விருதின் மதிப்பை உயர்த்தியுள்ளது எனவும் அனைத்து துறைகளிலும் டாடா குழுமத்தின் பங்களிப்பு மகத்தானது. டாடா என்றால் நம்பிக்கை, ஆறு கண்டங்களில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. 2021-2022 வரை டாடா நிறுவனங்களின் கூட்டு வருவாய் 128 பில்லியன் டாலராக உள்ளது எனவும் தொிவித்தார்.
டாடா குழுமத் தலைவர், பத்ம விபூஷன் ஸ்ரீ ரத்தன் டாடா அவா்களுக்கு மகாராஷ்டிராவின் முதல் 'உத்யோக் ரத்னா விருது - 2023' வழங்கியது எங்களுக்கு மரியாதை மற்றும் பெருமையான தருணம் என்று துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் ட்விட்டாில் தொிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:டிஜிட்டல் இந்தியா திட்டமே, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான முதல்படி - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி!