நாம் அன்றாடம் சாப்பிடும் தோசைகளிலேயே மசால் தோசை, நெய் தோசை, பன்னீர் தோசை என வெரைட்டி வெரைட்டியாய் உணவகங்களில் கிடைக்கின்றன. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் யூடியூப் போன்ற வலைதளங்களில் பார்த்து வித்தியாசமாக சாப்பிட விரும்புகின்றனர்.
பல இடங்களில் நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவுகளிலேயே வேறு வேறு பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வெரைட்டி காட்டப்படுகின்றன. அதுபோலத்தான் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஃபயர் தோசை எனப்படும் நெருப்பு தோசை ட்ரெண்டாகிவருகிறது.
ட்ரெண்டாகும் பையர் தோசை!
இந்த நெருப்பு தோசை குறித்த காணொலி ஒன்று Foodie Incarnate என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த தோசையை தயாரிக்க முதலில் தவாவில் மாவு ஊற்றப்படுகிறது. அதில் மசாலாக்கள், காய்கறிகள், சீஸ், சோளம், சாஸ் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
பிறகு தீயை அதிகரித்து மின்விசிறி ஒன்றை பயன்படுத்தி தீயை சிதற வைக்கின்றனர். இந்த நெருப்பு காண்பதற்கு பிரம்மிப்பாய் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இறுதியாக இந்த தோசை துண்டுகளாக வெட்டப்பட்டு தட்டில் அலங்கரிக்கப்படுகிறது. பிறகு சீஸ் தூவப்படுகிறது.
பிரத்யேகமான இந்த தோசை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். ஆனால் இதன் சுவை எப்படி இருக்கும்? இந்தூர் சென்றால் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
இதையும் படிங்க:அடடே... தோசையில் அரசியல் - கேரளாவின் புது ட்ரெண்ட்!