இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வையற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு இந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற யாஷ் சோனகியா, 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.
சாதனை மாணவர் யாஷை கல்லூரி நிர்வாகம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது. அந்த கல்லூரியில் அதிகளவு ஆண்டு வருமானத்தில் வேலை பெற்ற மாணவர் யாஷ்தான் என்று கல்லூரி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர்.