தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 19, 2021, 10:22 AM IST

Updated : Nov 19, 2021, 10:48 AM IST

ETV Bharat / bharat

Indira Gandhi Birth Anniversary: 'இந்திரா காந்தியின் மிகப் பெரிய பலமே இதுதான்!'

இந்திரா காந்தியின் பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், அவர் குறித்து ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

Indira Gandhi Birth Anniversary
Indira Gandhi Birth Anniversary

நாட்டில் எத்தனை பேர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தாலும் என்றும் தனித்து இரும்பு மங்கையாகத் திகழ்பவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. நாட்டின் முதல் பெண் பிரதமரான இவருக்கு இன்று (நவம்பர் 19) 104ஆவது பிறந்த நாள். இதையொட்டி தலைவர்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் நம்பிக்கைக்குரிய பிரதமர்களில் இந்திரா காந்தியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களது இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்திரா காந்தியின் மிகப்பெரிய பலமாக இருந்தது. பாட்டி, உங்களின் துணிவு எப்போதும் ஊக்கமளிக்கிறது. நான் இன்னும் என்னுடன் உங்களைக் காண்கிறேன். இதயப்பூர்வமான அஞ்சலி" எனப் பதிவிட்டுள்ளார்.

பிறப்பு முதல் பிரதமர் வரை இந்திராகாந்தி

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகளான பிரியதர்ஷினி காந்தி (இந்திரா காந்தி) 1917 நவம்பர் 19 அன்று பிறந்தார். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி காங்கிரஸ் அதிகார செயல்பாட்டிலேயே இருந்தது.

இவர் 1959ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் அவரது தந்தை மறைவுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தவர்.

சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கிடையே, காமராஜரின் ஆதரவோடு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966ஆம் ஆண்டிலிருந்து 1977 வரையும், 1981 முதல் மரணம் அடையும் வரை அதாவது 1984 வரை பிரதமராக இருந்துள்ளார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு நாட்டின் நீண்ட கால பிரதமராகவும் இவர் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திரா காந்தியை பின்தொடரும் பிரியங்கா!

Last Updated : Nov 19, 2021, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details