டெல்லி: இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தலைநகர் டெல்லியில் 2023ஆம் ஆண்டின் G20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுவதால் இண்டிகோ விமானத்தின் பயணிகள் செப்டம்பர் 9 மற்றும் 11ஆம் தேதி வரை உள்ள தினத்தில் டெல்லிக்கு வரவதற்காக அல்லது டெல்லியிலிருந்து வேறு பகுதிக்கு செல்ல முன் பதிவு செய்திருந்தால் தங்களது பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் அல்லது ரத்து செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பாணையின் படி செப்டம்பர் 9 மற்றும் 11ஆம் தேதி வரை எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளது என்ற விபரத்தை அளிக்கவில்லை. G20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் விமான பயணங்களை மாற்றி அமைத்தல் அல்லது பயணங்களை ரத்து செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தாய்லாந்து - சென்னை.. கடத்திவரப்பட்ட 14 அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள்.. விமான நிலையத்தில் பறிமுதல்..