தமிழ்நாடு

tamil nadu

நடுவானில் பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. அவசரமாக தரையிறங்கியும் பிரயோஜனம் இல்லை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:52 PM IST

மும்பை - ராஞ்சி இண்டிகோ (IndiGo) விமானத்தில் பயணித்த நபருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ரத்த வாந்தி எடுத்த பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

நாக்பூர் (மகாராஷ்டிரா):மும்பை - ராஞ்சி (Mumbai-Ranchi) சென்று கொண்டிருந்த இண்டிகோ (IndiGo) விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் உடல்நல கோளாறு காரணமாக பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விமானம், நாக்பூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. பயணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இண்டிகோ (IndiGo) விமான எண் 6E 5093 நேற்று (ஆகஸ்ட் 21) மும்பையில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் தேவானந்த் திவாரி (62) என்பவர் பயணம் செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் திடீரென திவாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திவாரி, விமான பணியாளர்களிடம் தனது உடல்நிலை குறித்து தெரிவித்து உள்ளார்.

திவாரியின் உடல் நிலை மோசமானதை அறிந்த விமான குழுவினர் உடனடியாக விமானத்தை நாக்பூர் விமான நிலையத்திற்கு திருப்பினர். அதைத் தொடர்ந்து விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின்னர் பயணி உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் பயணியின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:BRICS Summit: 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு.. பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்!

ABOUT THE AUTHOR

...view details