டெல்லியில் இருந்து நேற்று (அக்-28) பெங்களூரு நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனையறிந்த விமானிகள் மீண்டும் விமானத்தை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கனர். அதன்பின் தொழில்நுட்பக்குழு விமானத்தை சீர் செய்தது.
இண்டிகோ விமானத்தில் தீ... பயணிகள் அச்சம்... டெல்லியில் அவசர தரையிறக்கம்...
டெல்லியிலிருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீரென தீப்பொறி கிளம்பியதால் விமானிகள் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினர்.
இதுகுறித்து இண்டிகோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு 184 பேருடன் பயணித்த A320 விமானம் புறப்படும் போது என்ஜின் செயலிழந்ததால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) இதுகுறித்து விசாரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு - காசியாபாத்தில் காற்றின் தரக்குறியீட்டு எண் 405ஆகப்பதிவு!