தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ISRO: சந்திரயான்-3 நிலவில் எப்போது தரையிறக்கப்படும் - புதிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ! - சந்திரன்

The Lander Module (LM) health is normal(Chandrayaan-3): நிலவிற்கான மூன்றாவது பயணத்தை வெற்றிக்கரமாக நெருங்கி வரும் இந்தியா - திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3ன் ரோவர் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவிப்பு.

Chandrayaan-3
Chandrayaan-3

By

Published : Aug 20, 2023, 1:20 PM IST

பெங்களூரு:சந்திரயான்-3 நிலவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறக்கும் பணி தொடங்கப்படும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. தரையிறக்கும் பணி முடிந்த பின் லேண்டரின் உள் கட்டமைப்புகள் பரிசோதனை செய்யப்பட்டு பின் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் என்றும் அதன், பின் சந்திரனில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 நிலவில் மேற்பரப்பில் தரையிறங்கும் போது பல சவால்களை எதிர்கொண்டது. அதன் பின் தகவல் தொழில்நுட்பம் துண்டிக்கப்பட்டது. தற்போது சந்திரயான்-2வில் எற்பட்ட தவறுகளை திருத்தி கொள்ளும் விதமாக சந்திரயான்-3 உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

நிலவிற்கு மூன்றாவது முறையாக பயணம் மேற்கொள்ளும் சந்திரயான்-3 பாதுகாப்பாக மற்றும் மெதுவாக தரையிருங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவின் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பின் ரோவர் நிலவில் தனது பயணத்தை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணில் செலுத்தப்படும் செலவு சேர்க்காமல் ரூ.250 கோடி செலவில் சந்திரயான்-3 உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று சந்திரயான்-3ன் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு லேண்டர் நிலவிற்கு நெருக்கமாக சென்றுள்ளதாகவும், லேண்டர் தற்போது வரை முழுபாதுகாப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் விக்ரம் சாராபாய் பெயரை சந்திரயான்-3ல் இருந்து நிலவில் தரையிறக்கப்படும் லேண்டருக்கு இஸ்ரோ பெயரிட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவின் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலக அளவில் சாதனை படைத்த நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

நிலவிற்கான இந்தியாவின் வெற்றிகரமான பயணம் பூமியில் வாழ்க்கையை மேம்படுத்தவும் மேலும் நிலவிற்கு அடுத்தபடியாக இருக்கும் சூரிய குடும்பம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உதவும். சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.

அதிகளவில் பாறைகள் நிறைந்த பள்ளங்கள் மற்றும் தாதுக்களின் படிமங்களை உறுதி செய்யும் வகையில் கடினமான உந்துவிசையுடன் கூடிய ரோவர் மற்றும் லேண்டர், நிலவின் தென்பகுதியில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறக்கப்படும். நிலவின் வேறு பகுதியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான நிலப்பரப்பாக இருக்கும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விண்வெளி போட்டி: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

ABOUT THE AUTHOR

...view details