காந்திநகர்:குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்கம் தொடங்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், உருக்கு ஆலையின் மூலம் முதலீடு அதிகரிப்பதுடன், ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளுக்கும் உருவாகும். இந்த விரிவாக்கத்திற்கு பின்னர் ஹசீரா ஆலையின் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 9 மில்லியன் டன்னில் இருந்து 15 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.
2047ஆம் ஆண்டு வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் உருக்கு தொழில்துறையின் இலக்குகள் உள்கட்டமைப்பு துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இதே போல சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், கட்டுமானம், வாகனத் தொழில், மூலதனப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி ஆகியவற்றில் உருக்குத்துறை பெரும் பங்களிப்பை வழங்கும். இந்த திட்டம் மேக்-இன்-இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் நம்புகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் அனைவரது முயற்சியின் காரணமாக இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளது.