டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருநாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா ராணுவம் நுழைந்துள்ளது. மக்கள் எங்கும் வெளியேற முடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் போரால் இந்திய மற்றும் தேசிய பங்குச்சந்தைள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஆபரணத் தங்கத்தின் விலை படிப்பாக உயர்ந்து ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளன. பொருளாதாரத் தடையை சந்திக்கத் தயாராக உள்ளதாக ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.