மகாராஷ்டிரா : ஒரு மணிநேரத்தில் அதிகளவில் சீட்டு அட்டைகளை தர்பூசணி பழத்தில் வீசி மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் உலக சாதனை படைத்து உள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய கொடமூர். இளம் சாதனையாளரான ஆதித்யா ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக சீட்டு அட்டைகளை தர்பூசணி பழத்தின் மீது வீசி உலக சாதனை படைத்து உள்ளார். இதற்கு முன் சீனாவை சேர்ந்த வீரர் உலக சாதனை படைத்து இருந்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி ஆதித்யா புதுமைல்கல் படைத்து உள்ளார்.
ஏற்கனவே அதித்யா கொடமூர் மூன்று முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஆதித்யாவின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஒரு நிமிடத்தில் 18 பிளேயிங் கார்ட்ஸ் எனப்படும் சீட்டு அட்டைகளை தர்பூசணி பழத்தின் மீது வீசி ஆதித்யா சாதனை படைத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு சீனாவை சேர்ந்த வீரர் ஒருவர், ஒரு நிமிடத்தில் தர்பூசணி பழத்தில் 17 பிளேயிங் கார்டுகளை வீசி இருந்ததே கின்னஸ் சாதனையாக கூறப்பட்டு உள்ளது. தற்போது இந்த சாதனையை ஆதித்யா முறியடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனையை ஆதித்யா முறியடித்ததாக கூறப்பட்டு உள்ள நிலையில், எதிர்க்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்க விரும்புவதாக அவர் தெரிவித்து உள்ளார்.
பிளேயிங் கார்டுகளை வைத்து பல்வேறு வித்தைகளை காட்டும் ஆதித்யா வாழைப்பழம், தண்ணீர் பாட்டில் மூடி, பலூன் உள்ளிட்ட பொருடகளை அநாயசமாக தட்டி விட்டு மிரள வைக்கிறார். ஆதித்யாவின் சாகசங்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு உலக சாதனைகளை படைத்து உள்ள நிலையில், தனது பெற்றோர் அளித்த ஊக்கமே சாதனைகளை படைக்க உதவியதாக ஆதித்ய கொடுமூர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பல்வேறு உலக சாதனைகளையும் பிளேயிங் கார்டுகளை கொண்டு மாயாஜால வித்தைகளை செய்யவும் அதில் நிபுணத்துவம் பெற்றவராக திகழவும் விரும்புவதாக ஆதித்யா கொடுமூர் கூறி உள்ளார்.
இதையும் படிங்க :டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!