ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் விக்ரம் எஸ்(vikram S) என்ற ராக்கெட்டை தயாரித்திருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளி ஆய்வாளரான விக்ரம் சாராபாயை நினைவு கூறும் வகையில் இந்த ராக்கெட்டிற்கு ’விக்ரம்’ பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் நவம்பர் 15 செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
நவ.15ல் விண்ணுக்கு செல்லும் முதல் தனியார் ராக்கெட் 'Vikram S' - Indias first privately built rocket Vikram S
இந்தியாவில் இருந்து முதல் தனியார் துறை ராக்கெட் ’விக்ரம் எஸ்’ வரும் 15-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் இருந்து இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்கள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமான இஸ்ரோ(ISRO) தயாரித்திருந்த நிலையில் முதல் தனியார் ராக்கெட்டாக விக்ரம் எஸ் விண்ணில் பாயவுள்ளது.
இந்த "விக்ரம்-எஸ் ராக்கெட் ஒரு ஒற்றைநிலை துணை சுற்றுப்பாதை ஏவுகணையாகும். இது மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். இதோடு விக்ரம் ஏவுகணை வாகனங்களில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் உதவும்” என்று ஸ்கைரூட்டின் தலைமை இயக்க அதிகாரி நாகா பரத் டாக்கா தெரிவித்துள்ளார்.