சென்னை: சென்னை ஐஐடியின் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தை உருவாக்க தொடங்கியது. இதில், 2 ஏவுதள பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்னிகுல் ஏவுதளம் (ஏஎல்பி) மற்றும் அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம் (ஏஎம்சிசி) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனியார் ராக்கெட் ஏவுதளத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தனியார் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இப்போது இந்தியா மேலும் ஒரு ஏவுதளத்திலிருந்து ராக்கெட்டுகளை அனுப்ப முடியும். இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் அனைத்து முக்கியமான அமைப்புகளும் ஒன்றுக்கொன்று 4 கி.மீ தொலைவில் உள்ளவை. கவுண்ட் டவுன் வசதிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.