தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Gay Ashram : தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான முதல் ஆசிரமம்...! - ashram for gays

இந்தியாவை சேர்ந்த மன்வேந்திரா சிங் என்பவர் கொலம்பியாவில் ஒரு ஆணை திருமணம் செய்து இந்தியாவின் முதல் திருமணமான தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்படுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக திருமணம் செய்த இரு ஆண்கள்- யார் இவர்கள்?
இந்தியாவிலேயே முதல் முறையாக திருமணம் செய்த இரு ஆண்கள்- யார் இவர்கள்?

By

Published : Jul 9, 2022, 6:34 PM IST

இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் மன்வேந்திர சிங் இவர் டிஅண்ட்ரி ரிச்சார்ட்சன் என்பவரை ஜுலை 6 ஆம் தேதி கொலம்பியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்துக்கொண்டார். இதன் மூலம் இவர் இந்தியாவின் திருமணமான ஆங்கிலயத்தில் ”Gay” எனக் கூறப்படும் முதல் தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்படுகிறார்.

இந்த மன்வேந்திய சிங் யார்? என்ன செய்கிறார் என பார்க்கலாம். குஜராத் மாநிலத்தை சேர்ந்த மன்வேந்திர சிங் டிஅண்ட்ரி ரிச்சார்ட்சன் என்பவரை காதலித்து அவருடன் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள பலமுறை திட்டமிட்டு தற்போது இறுதியாக இருவரும் திருமணம் செய்துக் கொண்டு அதற்கான சான்றிதழையும் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த மன்வேந்திரா சிங் என்பவர் கொலம்பியாவில் ஒரு ஆனை திருமணம் செய்து இந்தியாவின் முதல் திருமணமான தன்பாலின ஈர்ப்பாளராக அறியப்படுகிறார்.

மேலும் இன்றும் வெளியில் சொல்ல தயக்கம் காட்டக்கூடிய தன்பாலின ஈர்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில் முகநூலிலும் இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்.

மன்வேந்திர சிங் கோகில் முதன் முதலில் தன்னை ஒரு தன்பாலின் ஈர்ப்பாளராக வெளிப்படுத்தி தற்போது இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் பிரபலமைந்துள்ளார். இந்த Gay தம்பதிகள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஒரு ஆசிரமத்தை உருவாக்கியுள்ளனர் குஜராத்தின் ராஜ்பாலாவில் உருவாக்கியுள்ளனர். மேலும் அந்த ஆசிரமத்திற்கு எழுத்தாளர் ஜேனத் என்பவரின் பெயரை வைத்துள்ளனர்.

ஏனெனில் ஆசிரமம் அமைப்பதற்கான பெரும்பாலான பணத்தை எழுத்தாளர் ஜேனத் அவர் ஒரு தன்பாலின் ஈர்ப்பாளராக இல்லாத போதும் வழங்கியதாக குறிப்பிட்டனர். மன்வேந்திராவிற்க்கு 2009 ஆம் ஆண்டில் தான் தன்பாலின ஈர்பாளர்களுக்கான ஆசிரமத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும், தனக்கு தேவைப்படும் போது அப்படி ஒரு இடம் இல்லாததால் தன்னுடைய சமூக மக்களுக்கு உதவும் நோக்கில் உலகத்திலேயே முதல் தன்பாலின ஈர்ப்பளர்களுக்கான ஆசிரமத்தை அமைத்துள்ளார்.

சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட இந்த தம்பதிகளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மேலும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட இந்த தம்பதிகளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:தன்பாலின திருமணத்திற்கு சுவிட்சர்லாந்து ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details