தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Eastern Cross Taxiway: இந்தியாவின் முதல் ஈஸ்டேர்ன் க்ரோஸ் டேக்ஸிவே திட்டம்: சிறப்பம்சங்கள் என்ன? - விமான பயண டிக்கெட் விலை

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஈஸ்டர்ன் க்ரோஸ் டேக்ஸி வேய் திட்டத்தை (Eastern Cross Taxiway) வரும் 13ஆம் தேதி இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைக்க உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 8, 2023, 12:58 PM IST

டெல்லி: இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஈஸ்டர்ன் க்ரோஸ் டேக்ஸிவே அமைக்கப்பட்டுள்ளது. 2.1 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த இரட்டை பாதை திட்டம் இந்தியாவில் முதன் முதலாக டெல்லி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஈஸ்டர்ன் க்ராஸ் டேக்ஸிவே திட்டத்தின் நோக்கம் குறித்து தெரிவித்துள்ள ஜிஎம்ஆர் குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் பிரபாகர ராவ், "இயற்கை மாசுபாட்டை கட்டுப்படுத்துவது, விமானம் தரையிரங்கி பயணிக்கும் நேரத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டம் மூலம் கிடைக்கப் பெறும்" என கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி, "சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டடக்கலை கொண்ட இந்த டாக்ஸிவே திட்டம் மூலம் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் ‘ஜீரோ கார்பன் உமிழ்வு விமான நிலையமாக' மாறும் எனவும், இந்திய விமான நிலையங்களுக்கு டெல்லி விமான நிலையம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்" எனவும் தெரிவித்தார்.

கிராஸ் டாக்ஸிவே திட்டத்தின் பலன்கள்:

1. விமானங்களுக்கான டாக்ஸி தூரத்தைக் குறைப்பது.

2. விமான உமிழ்வைக் குறைப்பது.

3. ஏடிஎஃப் போன்ற இயற்கை வளங்களைச் சேமிப்பது.

4. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 55,000 டன் CO2 குறைப்பு.

5. 2030-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு விமான நிலையத்தை உருவாக்குவது.

மேலும், இந்த திட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஈஸ்டேர்ன் க்ரோஸ் டேக்ஸிவே விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு விமான தளங்களை இணைக்கும் எனவும் இதனால், விமான பயணிகளின் நேரம் 7 முதல் 20 நிமிடங்கள் வரை மிச்சப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, விமானிகள் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போதும், தரையிரங்கி வெளியில் செல்ல இருக்கும்போதும் மற்ற விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரத்தை பொருத்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால், இந்த திட்டம் மூலம் விமானங்கள் மூன்றாவது ஓடுபாதையில் தரையிறங்கி, T1 ஓடுதளம் சென்ற பிறகு, விமானம் கடக்க வேண்டிய தூரம் தற்போது 9 கிலோ மீட்டரில் இருந்து 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்த்தப்பட்ட இரட்டைப் பாதைகொண்ட கோட் எஃப் டாக்ஸிவேகள் பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்டவை எனவும், A380, 8777 மற்றும் B747-8 போன்ற ஜெட் விமானங்களும் இந்த பாதையில் எளிதாக பயணிக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, இந்த பாதை, ஓரே நேரத்தில் இரண்டு பெரிய விமானங்கள் கடந்து செல்ல அனுமதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ஈஸ்டேர்ன் க்ரோஸ் டேக்ஸிவே (Eastern Cross Taxiway) திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கும் என உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தை மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வரும் 13-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

இதையும் படிங்க:RN Ravi: டெல்லி சென்றடைந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.. திமுக வார்த்தைப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details