தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகமதாபாத்தில் முதியவருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 வகை வைரஸ் தொற்று - அகமதாபாத்தில் முதியவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று

அகமதாபாத்தில் முதியவருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று
ஒமைக்ரான் வைரஸ் தொற்று

By

Published : Oct 19, 2022, 10:49 PM IST

அகமதாபாத்: இரண்டு ஆண்டுகள் கழித்து கரோனா பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ளன. மீண்டும் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் ஒமைக்ரான் பிஎஃப்.7 வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் மிகவும் வீரியத்துடன் செயல்படும். அகமதாபாத்தில் டிரைவ் இன் ரோடுக்கு அருகில் வசித்து வரும் 60 வயது முதியவருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நோயாளியின் உறவினர்கள் மற்றும் நோயாளியை மருத்துவமனையில் சேர்க்கவில்லை. அறிகுறியின் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நோயாளிகளின் மாதிரிகள் காந்திநகரின் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்திற்கு (ஜிபிஆர்சி) பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: யாசகம் எடுத்து சம்பாதித்த ரூ.1 லட்சத்தை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய 80 வயது மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details