ஐவிஎஃப்(IVF- In vitro fertilization) கருத்தரிப்பு முறையின் மூலம் இந்தியாவின் முதல் பண்ணி (Banni) வகை எருமை பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா ஆக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த வினய் எல் வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.
2020 டிசம்பர் 15 அன்று குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, பண்ணி எருமை வகை குறித்து பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாளே, பண்ணி எருமைகளின் ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு திட்டமிடப்பட்டது.