டெல்லி:இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகளான வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். வீரர், வீராங்கனைகளின் கூக்குரலுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் செவி சாய்க்க வேண்டும் என்றும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வீரங்கனைகளின் புகார் குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன் சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாகப் பார்க்கிறது.