ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவி தற்போது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரம் மிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இரண்டு ஆண்டுகள் இந்தியா செயல்படவுள்ளது.
இதையடுத்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் அலுவலகத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடி இன்று முதல் வைக்கப்படவுள்ளது.
இந்தியாவுடன் சேர்த்து நார்வே, கென்யா, ஐயர்லாந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளும் இந்தத் தற்காலிக உறுப்பினர் பொறுப்பை ஏற்கவுள்ளன.
இந்தத் தற்காலிக உறுப்பு நாடுகள் ஆண்டிற்கு ஒரு மாதம் அமைப்பை தலைமைதாங்கி செயல்படும். இந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
இதையும் படிங்க:மார்ச் மாதத்தில் சர்வதேச ஆயுர்வேத விழா: அமைச்சர் முரளிதரன்