டெல்லி: மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 29), பிரதமர் நரேந்திர மோடியின் 89ஆவது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்(யுனிகார்ன்) எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 25 லட்சம் கோடிக்கும் அதிகம். இது நிச்சயமாக ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம். மொத்த யுனிகார்ன்களில், கடந்த ஆண்டு மட்டும் 44 யுனிகார்ன்கள் உருவாகின.
இந்த ஆண்டு சுமார் நான்கு மாதங்களில், 14 யுனிகார்ன்கள் உருவாக்கப்பட்டன. கரோனா பெருந்தொற்று காலத்தில்கூட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய யுனிகார்ன்களின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை விட அதிகமாக உள்ளது.
இந்திய யூனிகார்ன்கள் பன்முகப்படுத்தப்பட்டு வருகின்றன, சிறிய நகரங்களில் இருந்து வரும் தொழில்முனைவோர்கள் புதிய இந்தியாவின் வலிமையை உலகிற்கு பிரதிபலிக்கின்றனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: குஜராத் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளது - பிரதமர் மோடி