மக்களவைக் கூட்டத்தொடரில் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், "கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில்வே விபத்து காரணமாக ஒரு நபர்கூட உயிரிழக்கவில்லை. பயணிகள் பாதுகாப்புக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.
துறை சிறப்பாக இயங்கவே தனியார் பங்களிப்பு, முதலீட்டிற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. அதேவேளை ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாகாது. அது என்றும் இந்திய மக்களின் சொத்தாகவே இருக்கும்" என்றார்.