இந்திய கடற்படை நேற்று(நவ.18) தனது ஒன்பதாவது பி-8 ஐ கண்காணிப்பு விமானத்தை கோவாவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் பெற்றது. தற்போது வழங்கப்பட்ட விமானமானது நான்கு கூடுதல் விமானங்களில் முதல் விமானமாகும். ஏற்கனவே எட்டு விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. அதன் எண்ணிக்கையில் இது ஒன்பதாவது விமானம் ஆகும்.
முன்னதாக, பி-8 ஐ விமானத்திற்கான முதல் சர்வதேச வாடிக்கையாளராக இந்திய கடற்படை 2009 ஜனவரி 1 ஆம் தேதி எட்டு விமானங்களுக்கான 2.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தங்களை முடித்தது.