இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், “சீன ஆராய்ச்சிக் கப்பல் நடமாட்டம் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துள்ளது. வான்வழியாகவும், செயற்கைக்கோள் மூலமும் சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்தியாவை நோட்டமிடுகிறதா என்பதை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் எல்லைப்புற கடல்பகுதியிலிருந்து தொலைவில் இருக்கும் சீன ஆராய்ச்சிக் கப்பல் அமைதியாக இருப்பதால், நோட்டமிடவில்லை என்று கூறவிட முடியாது. சீனாவின் நோக்கத்தையும் சாதாரணமாக எடுக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.