டெல்லி : ஆழ்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டார்பிடோ வகை வெடிகுண்டை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.
ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை இணைந்து அதிக எடை கொண்ட டார்பிடோ ஆயுதத்தை உருவாக்கி உள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய வகையில் இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆழ்கடலில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய வகையில் உயர் தொழில்நுட்பத்தில் இந்த ஆயுதத்தை உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. டார்பிடோ ஆயுதம் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த வீடியோவை இந்திய கட்ற்படை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.
இது குறித்து இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் தன் ட்விட்டர் பக்கத்தில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிக எடை கொண்ட டார்பிடோ ஆயுதம் மூலம் நீருக்கடியில் இலக்கு மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்த முடியும். நீருக்கு அடியில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஆயுதத்தை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கி இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ புது மைல்கல்லை அடைந்து உள்ளதாக கூறியுள்ளார்.