டெல்லி: இந்திய கடற்படை 2047ஆம் ஆண்டுக்குள் முழுவதும் தற்சார்பாக (ஆத்ம நிர்பார்) மாறிவிடும் என்று மத்திய அரசுக்கு உத்தவாதம் அளித்துள்ளதாக கடற்படைத் தளபதி ஹரி குமார் தெரிவித்தார். இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதி ஹரி குமார் இன்று (டிசம்பர் 3) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹரி குமார் கூறுகையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவத்தின் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் உள்ளது. இந்த கப்பல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய கடற்படை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியா பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றில் முன்னேறும் வேளையில் கடல்சார் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் கடற்படைக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படை முழுவதும் தற்சார்பாக (ஆத்ம நிர்பார்) மாறிவிடும் என்று மத்தி அரசுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். அதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.