தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2021, 6:01 PM IST

ETV Bharat / bharat

Cyclone Jawad update: வலுவிழந்த புயல்

வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

Jawat cyclone loses strength  Jawat cyclone update  Indian Metrological Center about jawat cyclone  jawat cyclone current status  Cyclone Jawad update  வலுவிழந்த புயல்  வலுவிழந்த ஜாவத் புயல்  ஜாவத் புயல்  ஜாவத் புயல் நிலவரம்  வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல்
வலுவிழந்த புயல்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவத் புயல் நேற்றிரவு (டிசம்பர் 4) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீவிர காற்றழுத்தமாக வலுவிழந்த புயல், ஒடிசா கடற்கரை அருகே நகர்ந்து வருவதாகவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கவுள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் வானிலை மையத்தால் கூறப்பட்டுள்ளது.

இதனால், வடக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் தெற்கு மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மக்கள் சற்று நிதானமடைந்துள்ளனர். புயல் வலுவிழந்ததால் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி வேகத்தை ஒடிசா அரசு சற்று குறைத்துள்ளது.

முன்னதாக, புயல் பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார் என்பது குறுப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TN WEATHER: நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details