ஹைதராபாத்: ஹரியான மாநிலத்தின் பானிபட் நகரில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீரஜ் சோப்ரா. அவர் அங்குள்ள பிவிஎன் பள்ளியிலும், சண்டிகரிலுள்ள தயானந்த் ஆங்கிலோ - வேதிக் கல்லுரியில் பட்டப்படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஈட்டி எறிதல் மீது ஆர்வம் கொண்ட நீரஜ் சோப்ரா, தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் அசத்தியதன் மூலம், இந்திய ராணுவத்தில் சுபேதார் பணியிடம் கிடைத்தது.
மேலும், இளையோருக்கான உலக தடகளப் போட்டிகளில் வெற்றியை பெற்ற முதலாவது வீரர் மற்றும் ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதலாவது இந்திய வீரர் என்ற பெருமை நீரஜ் சோப்ரா தன் வசம் வைத்து உள்ளார். 2016ஆம் ஆண்டு 20 வயதிற்கு உட்பட்டோர்க்கான உலக போட்டி ஈட்டி எறிதலில் 86 புள்ளி 48 மீட்டர் தொலைவுக்கு எறிந்து உலக சாதனை படைத்தார்.
அதனை தொடர்ந்து 2017ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2018ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம், தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் என பதக்கங்களை வென்று குவித்தார். 2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 87 புள்ளி 58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டிய எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஒலிம்பிக் அறிமுகத்தில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் மற்றும் தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த முதல் வீரர் என்ற பல பெருமைகளை நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றார்.
இதையும் படிங்க:Neeraj Chopra: "தங்கம் வென்றது நாட்டிற்கு பெருமையான தருணம்" - நீரஜின் தந்தை சொல்கிறார்!