டெல்லி:கரோனா தொற்று காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலிலும், ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் ஆகியவற்றுக்காக பொதுமக்களிடம் காவல்துறையினர் அபராதம் விதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
இதுகுறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று (ஜூன் 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
"கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொதுமுடக்க காலத்தை கருத்தில் கொண்டு, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவர் 1ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ், வாகனத்தர சான்றிதழ், வாகனங்களுக்கான அனுமதி சான்றிதழ் என அனைத்தும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லும்.
எனவே, மேற்குறிப்பிட்ட தேதிக்கு பிறகு காலாவதியான வாகனச்சான்றிதழ்களை வைத்திருப்போர் மீது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள வேண்டாம்" என செய்திக்குறிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபர்மதி ஆற்றில் கோவிட் வைரஸ் மாதிரிகள்!