டெல்லி:உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா பிரான்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு உலக தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் - பிரதமர் மோடி - அர்ஜென்டினாவுக்கு மோடி வாழ்த்து
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டி மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும். பிபா உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள். இந்த போட்டியின் மூலம் அவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அர்ஜென்டினா அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து