ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில், பல இன்னல்களை கடந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என இந்திய அணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல இன்னல்களை கடந்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்... இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து! - இந்திய அணி வெற்றி
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "பிரிஸ்பேன் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா பதிவு செய்ததற்கு கோடிக்கணக்கான இந்தியர்களை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமிதம் கொள்கிறேன். பல இன்னல்களை கடந்து இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளீர்கள். சர்வதேச அரங்கில் வீரர்களின் திறமை பிரதிபலித்துள்ளது.
கட்டுப்பாடு, உடல் மற்றும் மன ரீதியான வலிமை, அணியின் ஒற்றுமை ஆகியவற்றால் இந்தியா வெற்றியை குவித்துள்ளது. எதிர்காலத்தில், இதுபோன்ற எண்ணிலடங்காத வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.