டெல்லி:டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பணியில் சுங்கத்துறை அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது வியட்நாமை சேர்ந்த இந்திய தம்பதியின் உடைமைகளை சோதனை செய்த போது 45 கைத்துப்பாக்கிகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
2 ட்ராலி பேக்குகளில் துப்பாக்கிகளை கடத்தி வந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். இதையடுத்து கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து தம்பதியை கைது செய்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
45 துப்பாக்கிகளுடன் டெல்லி விமான நிலையத்தில் தம்பதி கைது இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா இல்லையா என்பது பின்னர் தெரியவரும். இருப்பினும் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தனது முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் முழுமையாக செயல்படக் கூடியவை என தெரிவித்துள்ளது" என்றார்.
மேலும், தம்பதியிடம் அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், இதற்கு முன் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 25 கைத்துப்பாக்கிகளை கடத்தி வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மின் கட்டண மெசேஜ்: அபேஸான அரசு அலுவலரின் ரூ.8.8 லட்சம் மீட்பு - சைபர் கிரைம் போலீசார் அதிரடி!