சோனிபட்(ஹரியானா): ஆப்பிரிக்கா காம்பியாவைச்சேர்ந்த 66 குழந்தைகள் கடுமையான சிறுநீரகப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு ஹரியானாவைச் சேர்ந்த 'மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மருந்தை குடித்தது காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, “இந்தியாவில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரித்த ப்ரோமெதாசின் வாய்வழி கரைசல், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய நான்கு மருந்துகள் இருமல் மற்றும் சளி சிரப் ஆகும்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து உலக சுகாதார மையம் உத்தரவாதம் அளிக்கவில்லை. இந்த அசுத்தமான தயாரிப்புகள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்படலாம். இதனால் ஆபத்தை மேலும் அதிகரிக்கலாம்.