ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் (ஆகஸ்ட்.08) நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களுடன் 48ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஒரு ஒலிம்பக்கில் இந்தியா வென்ற அதிகப்பட்ச பதக்கங்கள் இதுவே. இந்நிலையில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வருகை தந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மொத்தம் 113 பதக்கங்கள் வென்று அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலத்துடன் மொத்தம் 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடமும், 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலத்துடன் மொத்தம் 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:இந்தியா 2, சீனா 274 - ஒலிம்பிக் உணர்த்தும் பாடம் என்ன?