தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த நாள்

By

Published : Dec 11, 2021, 7:48 AM IST

Updated : Dec 11, 2021, 8:55 AM IST

உலகளவில் சதுரங்க விளையாட்டில் இன்றுவரை முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று.

indian-chess-grandmaster-
indian-chess-grandmaster-

இந்தியாவின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 1969 டிசம்பர் 11 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை விஸ்வநாதன் அய்யர், தாய் சுசீலா. இவருக்கு சிவகுமார் என்ற சகோதரனும், அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர்.

விஸ்வநாதன் ஆனந்த் ஆறு வயதிலிருந்தே, தன்னுடைய தாயாரான சுசீலாவுடன் இணைந்து சதுரங்கம் விளையாடி, கூர்மையான நினைவாற்றலை வளர்த்துக்கொண்டார். பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள ‘டான் போஸ்கோ பள்ளியில்’ முடித்தார். பின்னர், உயர் கல்வி பயில ‘லயோலா கல்லூரியில்’ சேர்ந்த அவர், இளங்கலைப் படிப்பில் பி.காம் பட்டம் பெற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த்

பதினாறு வயதிலேயே, அதிவேகமாகச் சதுரங்கக் காய்களை நகர்த்தி ’மின்னல் சிறுவன்’ என்று அனைவராலும் போற்றப்பட்டவர். மேலும், 2003ஆம் ஆண்டு நடந்த உலகச் சாம்பியன் போட்டியில் வெற்றிபெற்று, ’உலகின் அதிவேக சதுரங்க வீரர்’ என்ற சிறப்புப் பட்டமும் பெற்றார். பதினான்கு வயதில், ‘இந்திய சதுரங்க சாம்பியன் பட்டம்’, பதினைந்து வயதில் ‘அனைத்துலக மாஸ்டர் அந்தஸ்து’, பதினெட்டு வயதில் ‘உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம்’, ஐந்து முறை ‘உலக சாம்பியன் பட்டம்’ என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார்.

விஸ்வநாதன் ஆனந்த்

இதுவரைக்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வென்றுள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்’, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் ‘புக் ஆஃப் தி இயர்’, ‘சோவியத் லேண்ட் நேரு விருது’, 1997, 1998, 2003, 2004, 2007, 2008ஆம் ஆண்டுகளுக்கான ‘சதுரங்க ஆஸ்கார் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த்

உலகளவில் சதுரங்க விளையாட்டில் இன்றுவரை முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் விஸ்வநாதன் ஆனந்த் தனது 52ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார்.

இதையும் படிங்க ; மரங்களை வெட்ட இடைக்காலத் தடை

Last Updated : Dec 11, 2021, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details