பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸிடம் 1,188 கோடி ரூபாய் மதிப்பில் 4,960 MILAN-2T ரக டாங்கிகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த முயற்சி 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை மேலும் வலுப்படுத்தும். நிலத்திலிருந்தும் வாகனத்தின் மீது வைத்தும் இந்த ஏவுகணையைப் பயன்படுத்தலாம்.
இதன்மூலம் பாதுகாப்பு படையின் தயார் நிலை மேம்படும். இந்த ஏவுகணையை இந்திய ராணுவத்தில் இணைப்பது மூன்றாண்டுகளில் முடிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் என்ற ஃபிரான்ஸ் நிறுவனத்திடம் உரிமம் பெற்ற பிடிஎல் நிறுவனம், 1,850 மீட்டர் தொலைவு வரை தாக்கி அழிக்கும் திறன்கொண்ட MILAN-2T ஏவுகணையை தயாரித்துவருகிறது. இதேபோல், 2016ஆம் ஆண்டு, பாரத் டைனமிக்ஸிடம் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.