டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சின் பிணக்கால் மலைத்தொடரில் பணியிலிருந்த போது உயிர் இழந்த அக்னி வீரர் கவாட் அக்ஷய் லக்ஷ்மணனுக்கு இந்திய ராணுவத்தால் இன்று (அக்.22) அஞ்சலி செலுத்தப்பட்டது.
இமயமலையின் காரகோரம் மலைப் பகுதியில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை உலகில் மிக உயரமான பகுதியாகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் ஆக்ஸிசன் குறைவாக இருக்கும். இது பூமியின் மிக உயரமான போர்க்களம் ஆகும். இப்பகுதியில் பணியிலிருந்த அக்னி வீரர் அக்ஷய் லக்ஷ்மணன் உயிர் இழந்துள்ளார் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி - பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!
இந்திய ராணுவ பிரிவான ஃபயர் அண்ட் ஃபியூரி கார்ப்ஸ் (Fire and Fury Corps) தனது "X" பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அக்னி வீரர் கவாட் அக்ஷய் லக்ஷ்மணனைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஃபயர் அண்ட் ஃபியூரி கார்ப்ஸ் வீரர்கள் அணிவகுப்பு மரியாதை மற்றும் அக்னி வீரரின் தியாகத்திற்கு மரியாதையைச் செலுத்துகின்றனர்.