சர்வதேச அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கரோனா வகைகளே வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதனால் பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்திய ராணுவம் சுமார் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.