வங்கதேச முன்னாள் குடியரசு தலைவர் ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தினத்தையொட்டியும் பன்னாட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது. சாந்திர் ஓக்ரோஷேனா என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் இந்திய ராணுவ படையைச் சேர்ந்த வீரர்கள், ஜூனியர் கமிஷனட் அலுவலர்கள் (ஜே.சி.ஓ) மற்றும் டோக்ரா படைப்பிரிவின் வீரர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளனர். முகாமில் பங்கேற்பவர்களுக்கு கோவிட்-19 ஆர்.டி.பி.ஆர் சோதனை செய்யப்பட்டது.
இந்த முகாமில், இந்திய ராணுவம் மட்டுமில்லாது ராயல் பூடான் ராணுவம், இலங்கை ராணுவம், பங்களாதேஷ் ராணுவம் போன்றவையும் பங்கேற்றுள்ளன.