தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்.எம் நரவனே நாளை நேபாளம் பயணம் - இரு நாட்டு உறவு மேம்படுமா? - ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம் நரவனே

இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம் நரவனே மூன்று நாள் பயணமாக நாளை நேபாளத்திற்கு செல்கிறார். இந்தப் பயணத்தின் போது நேபாள பிரதமர் கே.பி ஒலியை காத்மாண்டுவில் சந்தித்து பேசுகிறார்.

Indian Army
Indian Army

By

Published : Nov 3, 2020, 8:50 PM IST

Updated : Nov 3, 2020, 8:58 PM IST

இந்தியா - நேபாளம் இடையிலான பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் பயணமாக நாளை புதன்கிழமை இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே நேபாளம் செல்கிறார்.

இந்திய-நேபாள எல்லையில் நிலவிவரும் முக்கிய பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு ராணுவ அலுவலர்களுடனும், உயர்நிலை அலுவலர்களுடனும் இந்த சந்திப்பில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

நேபாள பயணத்திற்கு முன்பாக ஜெனரல் எம்.எம். நரவனே வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர்களின் அன்பான அழைப்பின் பேரில் நேபாளம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், இந்த சந்திப்பில் நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பூர்ணா சந்திர தாபாவைச் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு ராணுவத்தினரின் நட்பு நீண்ட தொலைவு செல்லும் என்று நான் நம்புகிறேன். நேபாள பிரதமரை சந்திக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நேபாளத்தில் அத்துமீறும் சீனா - விளக்கமும் பின்னணியும்!

Last Updated : Nov 3, 2020, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details